மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெறும், நரேந்திர மோடியே நாட்டின் அடுத்த பிரதமராவார் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் இருந்து போட்டியிட அத்வானி இன்று மனுதாக்கல் செய்தார். காந்தி நகர் தொகுதியில் அத்வானி வேட்பு மனு தாக்கல் செய்தபோது அவருடன் மோடியும் சென்றார். முன்னதாக காந்தி நகர் வந்த அவரிடம், 5 முறை காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றும், இம்முறை போபால் தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது, “மத்தியப்பிரதேச தொகுதியில் போட்டியிட வேண்டும் என அங்கிருந்த பாஜகவினர் ஆர்வம் தெரிவித்தனரே தவிர காந்தி நகரை விடுத்து போபாலில் போட்டியிட வேண்டும் என நான் விரும்பியதில்லை. குஜராத்மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்” என்றார். தேர்தல் பந்தத்தையும் மீறி தனக்கும் காந்தி நகருக்கும் ஒருபிணைப்பு இருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply