காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படும் காங்கிரஸ் கட்சியை தற்போது யாராலும் காப்பாற்ற முடியாது என்று பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீண்டும் ஆட்டிக்குவராத வண்ணம் பிரியா விடை கொடுங்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி விஷங்கள் ஆட்சிக்குவருவது குறித்து கவலைகொள்கிறார் என்று ராகுல்காந்தி பேசியது குறித்து பேசிய நரேந்திர மோடி, யார் அதிக காலமாக ஆட்சியில் இருக்கிறார்? காங்கிரஸ். எனவே அவர்கள் விஷத்தை சாப்பிட்டிருப்பார்கள். யாருடையை வயிற்றில் அதிகமாகவிஷம் இருக்கும்? காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல்காந்தி செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போன்று பேசுகிறார். காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு எதையும் செய்யவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் இதை செய்தோம் என்று உங்களிடம் கூறுவார்கள். ஆனால் நீங்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை எப்போது நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? 10 ஆண்டுகளாக என்னசெய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பவேண்டும் என்று மக்களிடம் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், பணவீக்கத்தை குறைப்பதாகவும் உறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் அதனை செய்தார்களா?. அவர்கள் மீண்டும் தேர்தல்வாக்குறுதிகளை கொடுத்திருப்பது மக்களை ஏமாற்றுவதற்கே என்று நரேந்திரமோடி கூறியுள்ளார். மேலும், பாஜக.,வுக்கு வாக்களிக்குமாறும், பாஜக மத்தியில் வலிமையான ஆட்சியை அமைக்க ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக.,வுக்கே தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply