நாட்டிலேயே, முதல்முறையாக, பெண்களுக்காக துவங்கப்பட்டுள்ள, “பாரதிய அவாம் கட்சி’ லோக்சபா தேர்தலில், நரேந்திரமோடி பிரதமராவதற்கு ஆதரவு தந்துள்ளது . நஜ்மா என்ற இஸ்லாமிய பெண், இந்த கட்சியின் தலைவராக உள்ளார்.

உ.பி., மாநிலத்தில், இந்தகட்சி துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, 35 ஆயிரம்பேர், இதில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இவர்களில், 2,500பேர் ஆண்கள்; பிறர்பெண்களே. உபி.,யைச் சேர்ந்த, நஜ்மா என்ற இஸ்லாமிய பெண், இந்தகட்சியின் தலைவராக உள்ளார். “லோக் சபா தேர்தலில், தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவது இல்லை’ என, தெரிவித்துள்ள நஜ்மா, ஆனால், நாட்டின் அடுத்த பிரதமராக, நரேந்திர மோடியை ஆதரவளிக்க போவதாக உறுதியளித்துள்ளார்.

நான், முஸ்லிம் சமூகத்தைசேர்ந்த பெண் என்பதால், லோக்சபா தேர்தலில், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். எங்கள் கட்சியை பொறுத்த வரை, இந்து – முஸ்லிம் என, எந்த விதமான பாகுபாடும் இல்லை. பெண்கள் நலனைமட்டுமே முக்கியமாக கருதுகிறோம். நாட்டின் அனைத்து தரப்புமக்களின் வாழ்க்கை தரமும் உயருவதற்கு, மோடி, உதவுவார் என்று நம்புகிறோம். இதனால்தான், அவருக்கு ஆதரவு அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply