அரசியல்வாதியாகிவிட்ட பின் கொள்கைப்பிடிப்போடு இருக்க வேண்டும். கொள்கையிலோ வளர்ச்சிப்பணிகளிலோ அல்லது தங்களைப் பற்றியோ ஏதாவது ஒன்றில் பிடிப்போடு இருப்பது அவரவர் விருப்பம். ஆனால் என்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கேப்டன்.அமரிந்தர்சிங், கடைசி

விஷயத்தில் அப்படி இருக்கிறாரா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி. பொய்ப்பிரசாரத்தை பரப்பிவிட்டு பின்னர் தானே வாபஸ் பெற்றுகிறார். ஜனநாயகத்தில், தன்னை மன்னர் போல பாவித்துக்கொண்டு, அந்த தோற்றத்தில் சந்தோஷமும் பட்டுக்கொள்கிறார். கேப்டனின் சாதனைகள் உண்மையில் விரும்பத்தக்கதல்ல. தன் வாழ்க்கையில் அவர் வகுத்துக்கொண்ட தரம் பொறாமைப்படக்கூடியதும் அல்ல.இந்த கரும்புள்ளிகளை மறைக்க, முரடராகவும், பணிவில்லாமலும் மக்களிடம் பேசுவதையும் குறைத்துக்கொண்டு, எதேச்சாதிகாரி போல நடந்து கொள்கிறார்.

என்னை போலி பஞ்சாபி, சாதாரண வக்கீல், கெட்ட அரசியல்வாதி என்கிறார். வக்கீலாகவும் அரசியல்வாதியாகவும் என் சாதனைகளை நானே கூறுவதை அடக்கமின்மையாகவும் பணிவின்மையாகவும் கருதுகிறேன். மற்றவர்கள்தான் என்னை எடைபோடவேண்டும்.

அவர் பஞ்சாப் முதல்வராக இருந்த காலத்தில், பஞ்சாபிற்கு செய்தது என்ன என்று இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாராளுமன்ற உறுப்பினராகவும் சட்டசபை உறுப்பினராகவும் இருந்துள்ள அவர், இதுவரை அவருடைய பெருமையாக சொல்லிக்கொள்ளும் விதத்தில் ஒரு நல்ல பேச்சுக்கூட பேசியது கிடையாது. நாங்கள் போட்டியிடும் அமிர்தசரசின் வளர்ச்சி குறித்த பார்வை என்று எதுவும் அவரிடம் கிடையாது. அமிர்தசரசுக்கு என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு வார்த்தை கூட உதிர்த்ததில்லை. மக்கள் அணுகும் விதத்தில் இருப்பாரா என்று கூட சொன்னது கிடையாது. இதுவரை சாதாரணமாக அணுகக்கூடியவராக இருந்ததுமில்லை.

மத்திய அரசுகளின் வரலாற்றிலேயே மிகவும் ஊழல் கறை படிந்த கட்சியின்  சார்பாக போட்டியிடுகிறார். ஊழலுக்கு கடுமையான தண்டனை வேண்டும் என்று வாதாடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்யும்போதுதான் குடும்பஸ்தர்ராக இருப்பதே நல்லது என்று உணர்வார்.

ஜனநாயகம் தான் வழியில் செல்லும். மூழ்கும் கப்பலின் தகுதியற்ற கேப்டனை அது ஏற்றுக்கொள்ளாது.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Tags:

Leave a Reply