பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தான் போட்டியிடும் வதோதரா தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வதோதராவில் இருந்து திறந்த ஜீப்பில் சென்று வேட்பு மனுவை தாக்கல்செய்தார். நரேந்திர மோடியின் வேட்பு மனுவை டீக் கடைக்காரர் ஒருவரும், ராஜகுடும்பத்தை சேர்ந்த ஒருவரும் முன்மொழிந்தனர். மாவட்ட ஆட்சியர் வினோத்ராவிடம், மோடி தனது வேட்புமனுவை அளித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

வேட்பு மனுவை தாக்கல்செய்ய வந்த மோடிக்கு, வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் நின்று சிறப்பான வரவேற்பு தந்தனர். சௌராஷ்டிரா பகுதியில் இருந்து நான் என் அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். நான் இப்போது மீண்டும் இந்தப்பகுதியில் வந்துள்ளேன் என்று கூறினார் நரேந்திரமோடி.

Leave a Reply