இந்தியாவிலேயே இஸ்லாமிய சமூகத்துக்கு அதிக இட ஒதுக்கீட்டைக் கொடுத்துள்ள மாநிலம் குஜராத் என்பதை புள்ளி விவரத்தோடு என்னால் கூறமுடியும் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ பேசியுள்ளார்.

கன்னியா குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வைகோ புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:

குஜராத்தில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்பதை சிறுபான்மை மக்கள் மறந்துவிடக் கூடாது. இந்தியாவிலேயே இஸ்லாமிய சமூகத்துக்கு அதிக இட ஒதுக்கீட்டைக் கொடுத்துள்ள மாநிலம் குஜராத்மாநிலம் என்பதை புள்ளிவிவரத்தோடு என்னால் கூறமுடியும்.

மத்தியில் ஊழலற்ற, நேர்மையான, தமிழகத்தை வஞ்சிக்காத ஓர் அரசு நரேந்திரமோடி தலைமையில் அமையவேண்டும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அவர் மத்திய அமைச்சராக வர வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன் என்றார் அவர்.

Leave a Reply