மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி வாக்கு வங்கி அரசியலை மட்டுமே நடத்தி வருகிறார். இங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அனைத்தும் போலியானவை. தற்போது மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றத்தை காணும்நேரம் வந்துவிட்டது என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம் சிலிகுரியில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தில் பேசியது:

“மேற்கு வங்கத்தில் முதல்வராக மம்தா பதவியேற்ற பிறகு நல்லமாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இங்கு எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இங்கு வாக்கு வங்கி அரசியலைதான் மம்தா செய்துவருகிறார்.

மம்தாவுக்கு என்னைப்பற்றி விமர்சனம் செய்யவில்லை என்றால், சாப்பிட்ட உணவேசெரிக்காது. திரிணமூல் காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைத்து இரண்டுவருடங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை இங்கு ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இங்குள்ளமக்கள் திரிணமூல் அரசால் நன்கு ஏமாற்றப்பட்டுள்ளனர். இங்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது அனைத்தும் போலியானவை. தற்போது மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றத்தை காணும்நேரம் வந்துவிட்டது.

டெல்லியில் முற்போக்கு சிந்தனை உள்ள அரசு அமைந்தால் மட்டுமே, எந்த ஒருகாரியமும் நிறைவேறும். மேற்குவங்க முதல்வர் சேற்றைவாரி வீசும்போதெல்லாம் தாமரை மலர்ந்து கொண்டே இருக்கும்.

சாரதா நிதி நிறுவனமோசடி பிரச்சினையில், திரிணமூல் கட்சி பெரும்பங்கு வகிக்கிறது. மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறைந்த நேரத்தில் பெரியமோசடிகளை திரிணமூல் அரசு செய்துள்ளது என்றால், அதிக வாய்ப்பையும் நேரத்தையும் கொடுத்தால் மக்கள் என்ன ஆவார்கள்?

திரிணமூல் கட்சிக்கு இம்முறை எந்த ஒருவாய்ப்பும் அளிக்ககூடாது. இந்த தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் தான் மக்கள் உண்மையான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் காணமுடியும்.

காங்கிரஸுக்கு 60 ஆண்டுகளை கொடுத்தீர்கள். பா.ஜ.க.,வுக்கு 60 மாதங்களை மட்டும் தந்துபாருங்கள், உண்மையான வளர்ச்சியை மேற்குவங்கம் காணும்” என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply