பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தன்னுடன் ஒரேமேடையில் விவாதம் செய்யத் தயாரா என்று நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் காமடி சவால் விடுத்துள்ளார்.

பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் அவல நிலையை கண்டு சீண்டுவார் யாரும் இல்லாத நிலையில் , கட்சியின் பெயரில் மட்டும் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் கார்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும், மற்றொரு பிரமாண்ட கட்சியான சமத்துவ மக்கள் படை கட்சியும் காங்கிரசின் கூட்டணியில் இணைந்து கூட்டணியின் எண்ணிக்கைக்கு மட்டும் வலுசெர்த்துள்ளன,

ஈழத்தமிழர் பிரச்னையில் சட்ட ரீதியாக காங்கிரஸ் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காங்கிரஸ் சீனாவுக்கு பயந்து இலங்கையிடம் நட்பாக இருக்கிறது என்று இரண்டு மாதத்திற்கு முன்பு உதார் விட்ட கார்த்திக், .இனி நாடாளும் மக்கள் கட்சியின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, நாங்கதான் ட்ரெண்ட் செட்டர் 14 தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்று பத்து நாட்களுக்கு முன்பு உதார் விட்ட குல்லா கார்த்திக் இன்று ஊழல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் .

ஒரு தொகுதியில் கூட போட்டியிட லாயக்கு இல்லை என்று காங்கிரஸ் கட்சியாலேயே கட்டம் கட்டப்பட்டுள்ள இந்த குல்லாக்கள் மோடியை எண்ண ஒபாமாவையே விவாதத்துக்கு அழைக்கலாம்.

தமிழ்தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply