பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை மீனம்பாக்கம் ஜெயின்கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

மீண்டும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மோடி தமிழகம் வருகிறார். ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் 18ஆம் தேதியும், முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்கரி 16ஆம் தேதி தமிழகம் வருகிறார். மூத்த தலைவர் வெங்கையா நாயுடு வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் வேலூர், கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார். கட்சியின் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி 20ஆம் தேதி வேலூரில் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

 

Leave a Reply