நேரு குடும்பம் குறித்து பாஜக நன்கு அறியும். நாகரீகம் கருதி தவிர்க்கிறோம் என்று ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளது . தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்’ என்று மோடி திருமண விவகாரத்தில், காங்கிரஸுக்கு பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க.,வின் செய்தித் தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் கூறுகையில், “நேரு குடும்பத்திலும் இந்திராகாந்தி குடும்பத்திலும் உள்ள விவகாரங்கள் குறித்து பா.ஜ.க நன்கு அறியும். எனினும், நாகரீகம் கருதி நாங்கள் அதை விமர்சனம் செய்வதில்லை” என்றார்.

பாஜகவின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “மோடியின் திருமண விவகாரம் தொடர்பாக ராகுல்விமர்சனம் மேற்கொள்ளும் முன் வேட்புமனு விவரங்களை நன்குபடித்திருக்க வேண்டும். மோடி உண்மையை தான் அதில் தெரிவித்துள்ளார். இதில் ஏதும் தவறில்லை. மேலும், இதுகுறித்த மோடியின் மனைவியே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பெண்கள் அமைப்புகள் சில மோடி குறித்து விமர்சனம்செய்கின்றனர். நான் அவர்களிடம் கேட்கநினைப்பது, அவர்கள் குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கினறனாரா? என்று தான். மோடியின் திருமணவிவகாரம் குறித்து அவரது சகோதரர் எங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மோடிக்கு நடந்த திருமணம் குழந்தை பருவத்தில் நடந்தது என்று விளக்கியுள்ளார்” என்றார்.

Tags:

Leave a Reply