நரேந்திரமோடி முதற்கட்ட பிரசாரத்துக்கு இன்று சென்னை வருகிறார்.மீனம்பாக்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். முன்னதாக சென்னைவரும் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக பாஜக ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அப்போது தமிழகத்தில் உள்ள தனது நீண்ட நாள் நண்பர்களையும் அவர் சந்தித்துபேச முடிவு செய்துள்ளார். அதன்படி மோடியின் நட்புவட்டாரத்தில் இருக்கும் நடிகர் ரஜினியையும் சந்தித்துபேச உள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி இன்று இரவு 7 மணிக்கு தென்சென்னை பாஜக வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து நடைபெறும் தேர்தல்பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இந்தகூட்டத்தில் மத்திய சென்னை தேமுதிக. வேட்பாளர் ரவீந்திரன், வடசென்னை தேமுதிக. வேட்பாளர் சவுந்திர பாண்டியன், ஸ்ரீபெரும்புதூர் மதிமுக. வேட்பாளர் மாசிலா மணி, காஞ்சீபுரம் மதிமுக. வேட்பாளர் மல்லை சத்யா, திருவள்ளூர் தேமுதிக. வேட்பாளர் யுவராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார் பொதுக் கூட்டத்தை முடித்துகொண்டு இரவே குஜராத் புறப்பட்டு செல்கிறார்.

Leave a Reply