திமுக தலைவர் மு. கருணா நிதிக்கு காக்காவின் குணம் உள்ளது என்று பா.ஜ.க மூத்த தலைவரும் தென்சென்னைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான இல. கணேசன் வர்ணித்துள்ளார்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, வதோதரா தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தான் திருமணமானவர் என்ற தகவலை அவர் தெரிவித்திருந்தார். மோடியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்துதெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு நடந்த திருமணத்தையே மறைத்தவர் நாட்டை எப்படி வழிநடத்துவார்? என்று விமர்சனம் செய்தார்.

இதற்கு தென்சென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் இல.கணேசன் தமது தேர்தல்பிரசார கூட்டத்தில் பதில் அளித்துள்ளார். நல்லது தெரியாது மஞ்சள், குங்குமம் மற்றும் மாலையுடன் காட்சியளிக்கும் பசுமாட்டை பார்த்தால் அதை தொட்டுகும்பிட வேண்டும் என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் ஏற்படும்.

ஆனால், அதன் முதுகில் சிறியகாயம் இருந்தால் அது மட்டும் தான் காகத்தின் கண்ணில்படும். காக்கா குணம் அதைப்போல, மோடியின் மகத்தான சாதனைகளை ஏற்கமறுக்கும் கருணாநிதி, மோடியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படி பேசியுள்ளார்.

இந்தவிஷயத்தில் காக்காவும், மு.க.வும்(மு.கருணாநிதி) ஒன்று . இந்த தேர்தல் , ஊழலில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றுவதற்கும், கடந்த 10 ஆண்டுகளாக நடை பெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்காகவும், நரேந்திரமோடியை பிரதமர் ஆக்குவதற்கும் நடைபெறும் தேர்தல்.

வல்லரசாக வேண்டும் உலகில் இந்தியா ஒருவல்லரசாக வேண்டும் என்பதற்காகவும், அடுத்த தலைமுறைக்கு நமது வளர்ச்சி பணிகளை எடுத்துசெல்வதற்காக மோடி தலைமையிலான ஆட்சி அமைய கோரி வருகிறோம்.மோடியின் பிரதிநிதியான நான் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன். உரிமைக்கு குரல்கொடுப்பேன் தென்சென்னை பகுதி மீனவர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அவர்களின் உரிமையை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பேன் என்றும் இல.கணேசன் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply