சோனியா மருமகன் ராபர்ட்வதோராவை சிறையில் அடைப்போம் என்று பாஜக., மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; தே.ஜ.,கூட்டணி மத்தியில் ஆட்சிக்குவந்தால் முதல் வேலையாக பல்வேறு ஊழல், முறைகேடு வழக்குகளை தூசு தட்டுவோம். குறிப்பாக சோனியா மருமகன் ராபர்ட்வதோரா மீது பல குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இவர் பல்வேறு தவறுகள் செய்துள்ளார். தேஜ., கூட்டணி ஆட்சி அமையும்பட்சத்தில் ராபர்ட் சிறையில் அடைக்கப்படுவார். இது நடக்கும். நான் போட்டியிடும் தொகுதியில் என்னை தோற்கடிக்க மாநில ஆளும் சமாஜ்வாதி கட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. போலீசார் துணையுடன் அராஜகம்நடத்திட முயற்சிகள் நடக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply