தி.மு.க. தலைவர் கலைஞர் கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசுகிறார் என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:–

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பாஜக அணி மக்கள்மனதில் இடம் பிடித்துள்ளது. இந்தகூட்டணி முதல் நிலை கூட்டணியாகும், அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றும். இந்ததேர்தலை பொறுத்தவரை மாநிலத்துக்கான தேர்தல் அல்ல. மத்தியில் நிலையான நல்லாட்சி அமைக்க வேண்டியதேர்தல். காங்கிரஸ் அரசை அகற்றவேண்டும். மோடி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

நரேந்திர மோடியை பற்றி திமுக. தலைவர் கலைஞரின் விமர்சனம் ஒருமூத்த அரசியல் தலைவருக்கு அழகல்ல. ஒரு முறை மோடியை நண்பர் என்கிறார், இன்னொருமுறை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்கிறார்.

ஒருமூத்த தலைவர் இப்படி தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட்டால் மக்கள் மதிக்கமாட்டார்கள். இப்போது மோடி மனைவியை மறைத்துவிட்டார் என்று கூறுகிறார். மோடிக்கு குழந்தை பருவத்தில் நடந்த திருமணம் அது. திருமணமான மறுநாளே அவர்கள் பிரித்துவிட்டார்கள். அதன்பிறகு அந்த அம்மாகூட அதைப்பற்றி பேசவில்லை. மோடியும் எங்கும், எப்போதும் நான் திருமணம் ஆகாதவர் என்று கூறியதும் இல்லை.

எனவே இந்தமாதிரி விமர்சனம் கலைஞருக்கு அழகல்ல. இது கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்வீசுவதற்கு சமமானதாகத்தான் இருக்கும். மேலும், தன்னை பற்றி பிறர்விமர்சிப்பதற்கு அவரே வாய்ப்பை எடுத்து கொடுப்பது போல் ஆகிவிடும்.

Leave a Reply