சென்னை வந்த பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று நடிகர் ரஜினி காந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திரமோடி இன்று மாலை சென்னை வருகைதந்தார். நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்தார் நரேந்திர மோடி!!.

தனி விமானத்தில் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேராக போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நரேந்திரமோடி சென்றார். அவரை ரஜினிகாந்த் தமது குடும்பத்தினருடன் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துக்கு நரேந்திர மோடி தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். லோக் சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மோடிக்கும் ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Leave a Reply