நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டுவெளியேற போவதாக தெரிவித்திருக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா, குஜராத் மாநிலத்துக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

மோடி நாட்டின் பிரதமரானால் நான் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவேன்.. 272 இடங்களை பாஜக பெற்று ஆட்சியமைத்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்பது தேவகவுடாவின் பிரகடனம்.

இந்நிலையில் மோடி கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் இன்று பிரசாரம் மேற்கொண்ட மோடி இதை குறிப்பிட்டு விமர்சனம்செய்தார். அப்போது, நான் பிரதமரானால் கர்நாடகத்தைவிட்டு வெளியேறுவேன் என்று கூறியிருக்கிறார் தேவகவுடா. அவர் குஜராத்துக்கு மாநிலத்துக்குவந்து குடியேறலாம். அவரை குஜராத் மாநில அரசு வரவேற்கிறது.. அவரது மகன் குமாரசாமியை விட தேவகவுடாவை நான் நன்றாக பார்த்துக்கொள்வேன் என்றார்.

Leave a Reply