தமிழர்களின் உள்ளம்தோறும், இல்லம்தோறும் உவகை தரும் தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறக்கிறது. கடந்த ஆண்டு, நடந்த நல்லவைகள் தொடரவும், தீயவைகள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் இந்தப் புதிய ஆண்டு அமைய வேண்டுமெனறு பெரிதும் வேண்டுகிறேன்.

இந்திய திருநாட்டில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும் தேர்தல் களம் களைகட்டியிருக்கும் நேரமிது. மத்தியில் நிலையான உறுதியான ஆட்சி அமைய வேண்டுமென்பது இந்த தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு சபதம் ஏற்பது அவசியமாகும். மக்களையும், நாட்டையும் வளம்பெறச் செய்யும் பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அப் பணியைத் திறம்பட ஏற்று நடத்தி வெற்றிபெறுவார் என்பது நிச்சயம் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்

Tags:

Leave a Reply