தமிழக பாஜக தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

அம்பேத்கரின் தியாகத்தை, ஏழை எளியமக்களிடம் அவருக்கு இருந்த அன்பை மோடியின் பிரசாரம் எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது. தலித்மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அம்பேத்கரின் எண்ணங்கள், கனவுகள் அடுத்து அமையபோகும் மோடி அரசால் நிறைவேற்றப்படும்.

அடுத்த பத்து ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைமக்களின் வாழ்வு உயர நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தமிழக வருகையால் இங்கு எழுச்சியும், உற்சாகமும் உருவாகி உள்ளது.

மோடியின் வருகை, அவரது பிரசாரம் காரணமாக தமிழகம் எதிர் காலத்தில் மறு மலர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கி விட்டது.

மோடி ரஜினியை சந்தித்ததும், ரஜினி மோடியுடன் பேசியதும், அவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தது. ரஜினி மோடிமீது பற்றும், பாசமும் காட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போது, பா.ஜ.க.,வை விமர்சிக்கவில்லை. இப்போது அவர், பாரதீய ஜனதாவை விமர்சிக்க தொடங்கியிருப்பது அதிமுக.விற்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது.

உலக தமிழர்களின் நலன்காக்கவும், அவர்களின் உரிமைகள் மீட்கப்படவும் மோடி அரசு பாடுபடும். இதில் எங்களுக்கு அசைக்க முடியா நம்பிக்கை உள்ளது. என்று கூறினார்.

Leave a Reply