பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் குற்றப் பின்னணி உடைய எம்பி., எம்.எல்.ஏ.க்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்று நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, கிரிமினல்கள் அரசியல்களில் நுழைவதை தடுப்பதுகுறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்படுகிறது. ஆனால், என்னால் இதனை சரி செய்ய முடியும். இந்திய அரசியலை சுத்தப்படுத்துவேன் என்று நான் உறுதி தருகிறேன் . அதற்கு உங்களுடையை முழு ஆதரவும்தேவை. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால் குற்றப்பின்னணி உடைய எம்பி.கள், எம்எல்ஏ.க்கள் சிறையில் தள்ளப்படுவார்கள். நாடுமுழுவதும் சிறப்பு நீதி மன்றங்களை அமைத்து குற்றப்பின்னணி உடைய நபர்கள் ஓராண்டுக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

5 ஆண்டுகளுக்குள், கிரிமினல்களிடம் இருந்து நாடுமீட்கப்படும். அரசியல், கிரிமினல் மயமானதற்கு காங்கிரஸ்தான் காரணம். ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக துவக்கத்தில் காங்கிரஸ் கிரிமினல்களை பயன் படுத்தியது. காலப்போக்கில் அவர்கள் செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகளாக உருவெடுத்தனர். அரசியல்வாதிகளை தொடர்ந்து பஞ்சாயத்துகள் வரையிலான அனைத்து அதிகாரமட்டத்திலும் குற்றப் பின்னணி உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply