சேலத்தில் நாளை நடைபெற உள்ள பிரச்சாரக்கூட்டத்தில் மோடியுடன் விஜய காந்த் பங்கேற்பதாக பாஜக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு கூறியதாவது:

மோடியின் சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் விஜய காந்த பங்கேற்காததற்கு ஒருகாரணமும் இல்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லாததை தவிர வேறு உள்நோக்கம் கிடையாது. அவருக்குப் பதிலாக தே.மு.தி.க கொறடா சந்திரகுமார் எம்எல்ஏ.,வும், வட சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சேலத்தில் நாளை நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக் கூட்டத்தில் மோடியுடன் விஜயகாந்த் பங்கேற்கிறார். முடிந்தால் கோவை கூட்டத்திலும் பங்கேற்பதாக விஜய காந்த் உறுதி அளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

Leave a Reply