பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழகத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் செய்து தேர்தல்பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். இன்றுமாலை கிருஷ்ணகிரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.

இதற்காக விமானம்மூலம் இன்று மாலை 3 மணிக்கு ஓசூருக்கு வரும் நரேந்திரமோடி, பேளகொண்டப் பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமான ஓடு தளத்தில் இறங்கி, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரிக்கு கிளம்புகிறார்.

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கும்மோடி, அங்கிருந்து கார்மூலம் மாலை 3.30 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெறும் கந்திக் குப்பம் மைதானத்திற்கு வருகிறார். அங்கு பிரமாண்ட தேர்தல்பிரசார பொதுக் கூட்டத்தில் நரேந்திரமோடி பங்கேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிடும் தே.ஜ.,கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து ஆதரித்து பேசுகிறார்.

சேலத்தில் மோடியுடன் விஜய கந்த் பின்னர் கிருஷ்ணகிரியில் இருந்து மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் நரேந்திரமோடி, 5.15 மணிக்கு சேலம் இரும்பாலையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். அங்குள்ள வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்தபடி பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் தே.ஜ.,கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துபேசுகிறார். சேலத்தில் தேமுதிக. சார்பில் போட்டியிடும் எல்கே.சுதீஷ், கள்ளக் குறிச்சி தொகுதிவேட்பாளர் டாக்டர் ஈஸ்வரன் உள்பட 14 வேட்பாளர்களை அறிமுகம்செய்து பேசுகிறார். இந்த பிரசாரகூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

கோவையில்.. சேலத்தில் பிரசாரத்தை முடித்ததும் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவைபுறப்பட்டு செல்கிறார்.அவர் கோவை கொடிசியாவில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்த பிறகு இரவில் கோவையில் தங்குகிறார். அதன் பின்னர் நாளை காலை 9 மணிக்கு விமானம்மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார். நரேந்திரமோடி கோவையில் பிரசாரம் செய்வதையொட்டி கோவையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply