மோடி தலைமையில் மத்திய அரசு உருவானால், இந்தியா வலிமை மிகுந்த , சக்திமிக்க நாடாக உருவாகும். எனவேதான், அவர் பிரதமராக வேண்டும் என்று , உணர்ச்சிப் பூர்வமாக கூறுகிறேன்,'' என, "சாகித்ய அகடமி' விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பேசினார்.

கன்னியா குமரியில், பாஜக., வேட்பாளர்களை ஆதரித்து, மோடி பிரசாரம்செய்தார். அக்கூட்டத்தில் ஜோ டி குரூஸ் பேசியதாவது: மதம் மற்றும் அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, இந்தியநாட்டின் சாதாரண குடிமகனாக, இங்கு உங்கள்முன் நிற்கிறேன். சமூகப் போராளி; எழுத்தாளர் என்ற முறையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, உங்கள்முன் நிற்கிறேன்.

இந்தியாவிற்கு அபாயம் வந்துள்ளது. வட மேற்கில் பாகிஸ்தான், வட கிழக்கில் சீன, தெற்கில் இலங்கை மூலம் அபாயம் வந்துகொண்டிருக்கிறது. இந்த அபாயங்களை போக்க, ஒருவலுவான, சக்திவாய்ந்த மத்திய அரசு தேவை. இந்தியாவை உலகநாடுகள் உற்று நோக்குகின்றன. இந்த நாட்டிற்கு என்ன தேவை என்ற குறிக்கோளுடன் நின்று கொண்டிருக்கிறேன்.

மோடி என்ற தொலை நோக்கு சிந்தனை உள்ளவர்; நல்ல திட்டங்களை செயல்படுத்தும் வல்லமையான தலைவர்; இந்நாட்டிற்கு, இப்போது தேவைப்படுகிறார் என்பதை நினைவு கூர வந்துள்ளேன். 7,600 சதுர கி.மீ., கொண்ட கடற்கரை பிரதேசத்தை தாக்கும் அபாயத்திலிருந்து காக்க, மக்கள் ஒருங்கிணைந்து, ஒரு உன்னத தலைவரை, மக்கள செல்வத்தை மதிக்கும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

டீ வியாபாரியின் மகனாக பிறந்து, அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்ற நிலையை ஏற்படுத்தி, மூன்று முறை முதல்வராக சேவை ஆற்றியவர், மோடி. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் தலைவர் அவர். "அவர் என்ன செய்துவிட்டார்' என சிலர் கேட்கின்றனர். அவரது உரைகள் செயலாக்கம் மிகுந்தவை. புனே கல்லூரியில் பேசிய மோடி, ""மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை, கரையான் கரைத்து கொண்டிருக்கிறது. "அவற்றை நாட்டின் வளம்கருதி, உன்னத சக்தியாக வடிவமைக்க வேண்டும்,'' என சூளுரைத்தார்.

இப்படிப்பட்ட வல்லமை படைத்தவர், நம் நாட்டிற்கு தேவை என்பதை, உளப்பூர்வமாக தெரிவிக்கிறேன். இதன் மூலம் மக்கள், சுபிட்சமான வாழ்க்கையை அனுபவிப்பர். மோடி பிரதமரானால், இந்தியா வலுவான, சக்தி, செயலாக்கம் மிகுந்த நாடாக உருவாகும் என்று அவர் பேசினார்.

Tags:

Leave a Reply