நான்பிரதமர் ஆனால், மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும், நான் பதவிக்குவந்தால், எந்த மாநிலத்தையும் பழிவாங்கமாட்டேன் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில முதல்மந்திரி நரேந்திர மோடி, ஒரு வங்காளமொழி பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- பா.ஜ.க.,வும், திரிணாமுல் காங்கிரசும் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இருகட்சிகளும் வெவ்வேறானவை. கொள்கை ரீதியாகவும் வேறுபட்டகட்சிகள். தேர்தல்நேரத்தில் இரு கட்சிகளும் விமர்சித்துக் கொள்வது இயல்பானதுதான். ஆனால், நான் பதவிக்குவந்தால், எந்த மாநிலத்தையும் பழிவாங்கமாட்டேன்.

என்னை பற்றி மேற்கு வங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி என்ன சொன்னாலும், அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கமாட்டேன். மாறாக, நான் ஆட்சிக்கு வரும் போது, வளர்ச்சி விஷயத்தில், மேற்கு வங்காளத்தை புறக்கணிக்க மாட்டேன் என்று உறுதி அளிப்பேன். எங்களுக்கிடையே எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய-மாநில அரசு உறவுபிரச்சினை எழாது.

நான் பிரதமர் ஆனால், மேற்கு வங்காளத்தை தொழில் மயமாக்க விரும்புகிறேன். அதற்குரிய சூழ்நிலையை உருவாக்குவதில், மம்தாபானர்ஜி அரசின் ஒத்துழைப்பு கிடைக் கும் என்று நம்புகிறேன். வளர்ச்சி விஷயத்தில், மம்தா அரசு, ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடாது என்று கருதுகிறேன். கடந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியின் போது, சிங்குரில் ‘நானோ’ கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு எழுந்த போது, அத்தொழிற்சாலையை குஜராத்துக்கு வரச்செய்தேன். மேற்கு வங்காளத்துக்கான வாய்ப்பை பறிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இருப்பினும், அது எனக்கு ஒருகுற்ற உணர்வாகவே உள்ளது.என்று நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply