காஷ்மீரை தனிநாடாக பிரித்து தரவேண்டும் என்பதை முன்னிறுத்தி இயக்கம் நடத்திவருபவர் சையது அலி ஷா கிலானி. அண்மையில், காஷ்மீர் விவகாரம் குறித்து முடிவுசெய்ய பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தூதுவரை அனுப்பியதாக இவர் கூறியது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையி்ல், கிலானியின் கருத்துக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கிலானியின் கருத்து குழந்தைத் தனமானது. அடிப்படை ஆதாரமற்றது. காஷ்மீர் பிரச்சனையில் சுமூக தீர்வு காண்பதற்காக கிலானியை சந்தித்துவிவாதிக்க இதுவரை எந்த தூதுவரையும் பாஜக. அனுப்பவில்லை.

ஐம்முகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் பாஜக. மிக உறுதியுடனும், தெளிவுடனும் உள்ளது. அதில் பேச்சவார்த்தை அல்லது விவாதம் என்பதற்கே இடமில்லை. எந்த அமைப்பில் இருந்தாலும் காஷ்மீர்பிரிவினை ஒன்றையே நிரந்தரத்தீர்வாக முன்வைக்கும் கிலானியின் அரசியல் ஜம்முகாஷ்மீர் மாநில மக்களின் விருப்பத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply