தென்சென்னை தொகுதி பாஜ வேட்பாளர் இல.கணேசன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, இல.கணேசன் பேசியதாவது: தமிழகத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் செல்லாததால் தான் தமிழகத்தின் உரிமைகள் பெறப்படாமலேயே இருந்துவருகிறது. அவ்வாறு சென்றவர்கள்

பதவியை பயன் படுத்தி எந்த பிரச்னையும் தீர்க்காமல் இருந்து வந்தது தான் உண்மை. மாறாக மன்மோகன் சிங் ஆட்சியில் தொடர்ந்து ஊழல்களில் ஈடுபட்டு இந்தியாவின் பெருமையை உலகளவிலே தலைகுனிய வைத்ததுதான் சாதனை. கடந்த 13 ஆண்டு கால ஆட்சியில் குஜராத்தை சர்வதேச அளவில் முதன்மை மாநிலமாக காட்டிய மோடியை தான் நாங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிலை படுத்தியுள்ளோம்.

தற்போது வந்துள்ள தகவல்களின் படி தமிழகம் உள்பட 300 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்ற நிலை உள்ளது. இதன்மூலம் மோடி அரியணையில் அமர்வது உறுதியாகி விட்டது. நரேந்திர மோடி ஆட்சியில் தமிழகத்தின் நலனை காப்பதற்காகவும், உரிமையை பெறுவதற்காகவும் தென் சென்னையில் நீங்கள் என்னை வெற்றிபெற செய்யவேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக குரல்கொடுப்பேன். என்று இல.கணேசன் பேசினார்.

Leave a Reply