பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உ.பி.,யின் வாராணசி மக்களவை தொகுதியில் தனது வேட்பு மனுவை வரும் 24ஆம் தேதி தாக்கல்செய்கிறார் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக் கிழமை பேசிய அவர், “வாராணசியில் மோடிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகள் கடத்தல் சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அஜய்ராய் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணை தலைவர் ராகுல்காந்தியும் மௌனம்காத்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடையும். மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட மக்கள் விரும்புகிறார்கள். வாராணசி தொகுதியில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல்செய்கிறார். அதன் பின்னர் பாஜக அலை சுனாமி அலையாக மாறும்’ என்று கூறினார்.

Leave a Reply