பிறக்கும் போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமை எப்படிபட்டது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். என்று நரேந்திர மோடி, இன்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தியை தாக்கி கடுமையாக பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது:- தாஜ் மகாலை பார்க்காத மக்கள் அதைப் பார்த்து விட்டு புகைப்படம் எடுத்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். அதேபோலத் தான் ராகுல்காந்தி வறுமை எப்படி இருக்கிறது என்று சோதித்துபார்க்கிறார். ஏழை குழந்தைகளிடம் அவர் புகைப்படம் எடுத்துகொள்கிறார். கேமரா எடுத்தபிறகு அவர் சோர்வடைந்து விடுகிறார்.

பிறக்கும்போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமை எப்படிபட்டது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். நான் வறுமையை உணர்ந்துகொள்கிறேன். ஏனெனில் அதில் நான் பிறந்தவன். எனது குழந்தை பருவத்தை பற்றி கேலிசெய்பவர்கள், நான் டீதான் விற்பனை செய்தேன், நாட்டை விற்பனை செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங்கின் குடும்ப அரசியலை விமர்சித்து பேசிய மோடி, அவர்கள் தங்கள் மகன், மகள் மற்றும் மருமகள்கள் தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் உத்தர பிரதேச இளைஞர்களை அவமானபடுத்துகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply