பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து தீவிர தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஐதராபாத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார். ஐதராபாத்தில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியததில் இன்று மாலை 6.15 மணிக்கு கூட்டம் நடக்கிறது.

தெலுங்கானா பகுதியில் மோடி பேசும் முதல் பொதுக் கூட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஐதராபாத் கூட்டத்துக்கு பாஜக.வினர் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ஐதராபாத் வரும்முன்பு நிஜாமாபாத், கரீம் நகர், பகபூப் நகர்களில் நடக்கும் கூட்டங்களில் மோடி கலந்துகொண்டு பேசுகிறார். மோடியின் சுற்றுப் பயணம் சீமந்திரா, தெலுங்கானா பகுதியில் எழுச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமாந்திராவில் பாஜக. – தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியைப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவிலும் அந்த கூட்டணிக்கு கணிசமான இடங்களில் வெற்றிகிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:

Leave a Reply