தமிழகம் முழுவதும் நரேந்திரமோடி அலை வீசிவருகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றிபெறும். கன்னியாகுமரி தொகுதியிலும் எனக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகி விட்டது.

குமரி மாவட்டத்தில் டோக்கன் மூலம் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதையடுத்து தேர்தல்கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மதுபானங்களும் நேற்று இரவு முதல் ஆங்காங்கே சப்ளைசெய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே தேர்தலை அமைதியாக நடத்தமுடியும்.

மோடி திறமையில்லாதவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் நரேந்திரமோடி பல ஆண்டுகளாக ஒரு திறமையான நிர்வாகத்தை நடத்தி உள்ளார். அவரை பலரும் பாராட்டி உள்ளனர். பா.ஜ.க.,வின் வெற்றியை பொறுத்துகொள்ள முடியாமல் வீண் வதந்திகளை பரப்பிவருகிறார்கள்.

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒருசில இடங்களில் 2 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வேட்பாளர்களின் பெயர்களை வெவ்வேறுவண்ணத்தில் இருக்குமாறு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரேபெயரில் 2 வேட்பாளர்கள் இருந்தால் அது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

என்று பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply