இந்தியா விஞ்ஞான உலகத்துக்கு பல முக்கியக் கொடைகளைத் தந்துள்ளது!! அதில் மிக முக்கியத்துவமானது ஆர்யபட்டரால் கண்டறியப்பட்ட பூஜ்யம் ஆகும் !! இதைச் சொன்னவர் உலக அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் ஆவார்!!

இந்தியாவின் பிரபல வானசாஸ்திர கணித மேதையாக விளங்கியவர் ஆர்யபட்டர்!! Pi (பை) என்பதை அவர் கண்டறிந்த விதம் பற்றி முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்!! அவர் அதற்குமுன்பே பூஜ்யம் என்ற ஒன்றைக் கண்டறிந்ததால்தான் பை யின் அளவில் 60000 தைக் கூட்டுதல் போன்ற ஒன்றை அவரால் சொல்ல முடிந்தது!! பூஜ்யம் என்பதற்கு இன்றுள்ளது போல எண்கள் எல்லாம் அந்தக் காலத்தில் கண்டறியப்படவில்லை!! ஆனால் எண்கணிதத்தில் பெரும் ஆய்வுகள் செய்தவர் ஆர்யபட்டர்! என் கணிதம் மட்டுமின்றி அல்ஜீப்ரா, கால்குலஸ் மற்றும் ட்ரிக்னாமெட்ரி ( DECIMAL MATHEMATICS, ALGEBRA, CALCULUS AND TRIGNOMETRY) போன்றவைகளின் அடிப்படைகளும் அவர் வகுத்தவையே!!

இதில் என் கணிதம் வருமிடத்து 7 என்ற எண் ஒரே இலக்கமாக வந்தால் அது ஏழைக் குறிக்கும் என்று 7 என்ற எண் முதல் இலக்கமாகவும் இரண்டாமிடம் எண் இல்லாமல் சூன்யமாகவும் இருந்தால் அது எழுபதைக் குறிக்குமென்றும் அதே போல 7 என்ற எண் முதல் இலக்கமாகவும் பின்னிரண்டு இலக்கங்கள் சூன்யமாகவும் வந்தால் அது எழுநூறைக் குறிக்குமென்றும் அவர் வகுத்துள்ளார்!! அந்த சூன்யம் என்பது அளவு ஒன்றுமற்ற எண் என்றும் அவர் கூறியுள்ளார்!!

சூன்யத்துக்கு ஒரு கட்டத்தில் பூஜ்யம் என்னும் பெயரையும் அவர் பயன்படுத்தினார்!! அதுவே இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது!! ஆனால் பூஜ்யத்துக்கு '௦' என்கிற குறியீடு அக்காலங்களில் பயன்பாட்டில் இல்லை!!

ஆர்யபட்டருக்குப் பின் வந்த பிரம்மகுப்தர் பூஜ்யத்தைக் குறிக்க எண்ணின் கீழ் புள்ளிகள் வைப்பதைப் பயன்படுத்தினார்!! அதாவது 7 என்கிற எண்ணின் கீழ் ஒரு புள்ளி வைத்தால் 70 ஆகவும் அதுவே இரண்டு புள்ளிகள் வைத்தால் 700 ஆகவும் அவர் கணக்கிட்டார்!! அதன் பின்னர் இன்றுள்ள எண்கள் பயன்பாட்டுக்கு வந்த போது பூஜ்யத்துக்கு இன்றுள்ளது போல '௦' என்கிற குறியீடும் பயன்பாட்டுக்கு வந்தது!!

இன்றுள்ள அறிவியல் முன்னேற்றத்தின் அடிப்படையாக நமது கணித மேதை ஆர்யபட்டர் கண்டறிந்த சூன்ய எண்ணான பூஜ்யம் அடிப்படையாக உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது!!!

Leave a Reply