காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசின் மோசமான ஆட்சியால் பெரும்சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவை காப்பாற்ற கடவுள் தன்னை தேர்ந்தெடுத்திருப்பதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியுள்ளார் .

நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார உரை நாடுமுழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. பிரசாரத்தில் மோடி பேசியதாவது:கடினமான காரியங்களை செய்ய குறிப்பிட்ட நபர்களை கடவுள் தேர்ந்தெடுப்பார். காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசின் மோசமான ஆட்சியால் பெரும்குழப்பத்தில் உள்ள இந்தியாவை காப்பாற்ற கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார். உங்கள் ஆசிர்வாதம் எனக்குதேவை. இந்த தேர்தலில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.

232 தொகுதிகளில் நடந்துமுடிந்த தேர்தல்கள் அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்பதை முடிவுசெய்து விட்டன. ஐ.மு.,கூட்டணி முடிந்துபோன விஷயம். அது பெரும்தோல்வி அடைவது உறுதி. வரவிருக்கும் தேர்தல்களில் நிலையான அரசுக்கு நீங்கள் வாக்களிக்கவேண்டும். நீங்கள் அனைவரும் குறிப்பாக யாருக்கு வாக்களிக்கலாம் என குழப்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நிலையான ஆட்யமைய வாக்களிக்க வேண்டும். நிலையான அரசால்மட்டுமே நல்ல வளர்ச்சியை தர முடியும். பாஜவுக்கு 300க்கும் அதிகமான இடங்கள் கிடைப்பதை மக்கள் உறுதிசெய்ய வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியை காப்பாற்றி கொள்வதிலேயே அதிக அக்கறை செலுத்தியது. இத்தகைய அரசு எப்படி நாட்டுக்காக உழைக்க முடியும். அடுத்த நூற்றாண்டுக்கான அடித்தளத்தை உருவாக்க பா.ஜ.க.,வுக்கு வாய்ப்பளியுங்கள். என்று மோடி பேசினார்.

Leave a Reply