ரஜினி காந்த் முழுக்க ஆன்மிகத்தைக் கடைபிடிப்பதிலேயே கவனம்செலுத்துகிறார். தன்னை ஆன்மிகமே வழிநடத்துவதாக நம்புகிறார். கடவுளின் கட்டளையையே முழுக்கநம்புகிறார். அவரது அடுத்த பயணமும் ஆன்மிக வழியிலேயே அமையும். இது தான் அவரது விருப்பம். வேறுவிஷயங்களில் அவருக்கு நாட்டம் இல்லை. அவரது விருப்பம் தான் எங்களுடைய விருப்பமும்.

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் ரஜினி காந்த் அனுமதிக்கப்பட்டிருந்த போது நரேந்திரமோடி அக்கறையோடு வந்து நலம்விசாரித்தார். சமீபத்தில் எங்கள் வீட்டுக்கே வந்துசந்தித்தார். மோடி எங்கள் குடும்பத்தின்மீது மிகுந்த அன்புகொண்டவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் அவரைக் கருதுகிறோம். அந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது. இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்.

Leave a Reply