ராபர்ட் வதேரா நிலபேர விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை பா.ஜ.க வெளியிட்டுள்ளது

பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்

தமாத்ஸ்ரீ என்ற பெயரில் ஒரு குறும்படம் வெளியிடப்பட்டது. ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்வதேராவுக்கு முறைகேடாக நிலம் வாங்குவதற்கு உதவி செய்ததாகவும் இதன் மூலம் அவர் ரூ.300 கோடி லாபம் ஈட்டியதாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “வதேரா நில உச்ச வரம்பு சட்டத்தை மீறியுள்ளார். இதன்மூலம் லாபம் ஈட்டியுள்ளார். இந்த நிலபேரத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் அக்கட்சி யின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து சோனியாவும் ராகுலும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply