கார்கில்போரில் இறந்த தியாகிகளை களங்கப்படுத்துவதைவிட அரசியலில் இருந்தே விலகிவிடுவேன் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இமாச்சலபிரதேச பலம்பூரில் பிரச்சாரம்செய்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உங்கள் வாழ்த்துக்கள் எனக்குவேண்டும். நான் உங்களுக்கு சேவைசெய்ய விரும்புகிறேன். அவர்க்ளுக்கு நீங்கள் காங்கிரஸ் 60 ஆண்டுகலை கொடுத்தீர்கள். 60 மாதங்கள் எனக்குகொடுக்க மாட்டீர்களா?

கார்கில் போரில் போரில் உயிர் நீத்த கேப்டன் விக்ரம்பத்ரா, இந்த உள்ளம்கேட்குதே மோர் (more) என்று கூறுவார். அதையே நானும் கூறுகிறேன். இமாச்சல பிரதேசத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் பெறவிரும்புகிறேன். இந்தியா முழுவதும் தாமரைக்கு 300 இடங்களை தாருங்கள்” என்று மோடிபேசினார். மோடி இவ்வாறு பேசியதற்கு பத்ராவின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘3டி’ எனப்படும் முப்பரிமான தொழில் நுட்பத்தில் இன்றிரவு ஒளிபரப்பப்பட்ட பேச்சில் இந்தசர்ச்சை தொடர்பாக மோடிகடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

‘போரில் வீரமரணம் அடைந்த ஒரு தியாகியை நினைவுக் கூரக்கூடாது என்பது அரசியலில் எந்த வகையை சேர்ந்தது?’ . பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போவோம் என்ற பயத்தில் அனைத்துவகை அரசியல் தந்திரங்களையும் பயன்படுத்தி, காங்கிரஸ் என் மீது பழி சுமத்துகிறது.

‘நான் கொல்கத்தாவுக்கு சென்றபோது சுபாஷ் சந்திர போசை நினைவு கூர்ந்தேன். ஜான்சிக்கு சென்றபோது ராணி லட்சுமி பாயை நினைவு கூர்ந்தேன். இன்று, இமாச்சல பிரதேசத்துக்கு சென்றபோது இந்நாட்டின் வீரமகன் விக்ரம் பத்ராவை நினைவுக்கூர்ந்தேன்.

ஆனால், நான் அகமதாபாத் நகருக்கு திரும்பியதும் எனது அரசியல் எதிரிகள் என்னுடையகருத்தை திரித்து வெளியிட்டுள்ளதை அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன். விக்ரம்பத்ரா இந்தியாவின் மைந்தன். அவரை நினைவுக்கூர்வது தவறா?

அவருடைய பெற்றோர் ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர். நான் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். இந்தியாவின் தியாகிகளை பற்றி நினைவுக் கூரக்கூடாது என்பது என்ன வகை அரசியல் ஜுரம்? விக்ரம்பத்ராவுக்கு நான் களங்கம் விளைவிக்கவில்லை.

நமது தியாகிகளையும், அவர்களது பெற்றோரையும் களங்கப்படுத்த நினைப்பதை காட்டிலும் அரசியலை விட்டுவிலகுவதே மேல் என்று கூறும் அளவுக்கு, மோடி மாறுபட்டவன்’ என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply