அத்வானியின் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ஆமதாபாத்தில் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஓட்டு போட்டார். தொடர்ந்து அவர் ஓட்டுச் சாவடிக்கு வெளியேதான் ஓட்டுபோட்டதை கையை தூக்கி நிருபர்களிடம் சிரித்தபடி காட்டினார்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், தேர்தல்கள் என்பது ஜனநாயகத் திருவிழா. ஓட்டு ஜனநாயகத்தை உருவாக்கும். அனைவரும் தங்களின் ஓட்டுக்களை தவறாமல் செலுத்தவேண்டும். இதன் மூலம் வளமான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். ஓட்டுப் பதிவு அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். அத்வானி தொகுதியில் நான் வாக்காளராக இருப்பதில் பெருமைகொள்கிறேன். என்று மோடி கூறினார்.

Tags:

Leave a Reply