லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு ராஜஸ்தானில் ராபர்ட்வாத்ராவின் நிலபேர விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பா.ஜ.க தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல்முடிந்த பிறகு வசுந்தரா ராஜி முதல்வராக இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மரு மகன் ராபர்ட்வாத்ரா செய்த நிலபேர ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது. இந்தவிவகாரத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமைதியாக இருப்பது நிச்சயம் ஏதோ இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது

நிலபேர ஊழல் குறித்து காங்கிரஸ் விசாரணை குழுவை அமைக்கவேண்டும் இல்லை என்றால் வாத்ராவுக்கு எதிராத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக அவதூறுவழக்கை சோனியா தொடரவேண்டும் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply