தேர்தல்களில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்ற நடைமுறையை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக அமல் படுத்தினால் நிச்சயம் அதை வரவேற்பேன் என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.

குஜராத் மாநிலம் மேற்கு ஆமதாபாத் மேற்குமக்களவை தொகுதியில் உள்ள ஷப்பூர் பகுதி வாக்குச் சாவடியில் அதாவானி தனது மகன் ஜெயந்த், மகள் பிரதீபா ஆகியோருடன் சென்று புதன்கிழமை வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது:

கடந்த 1947 முதல் தற்போதுவரை பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளேன். ஆனால் இந்த மக்களவை தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கதாக விளங்குகிறது. நாடெங்கும் மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருவதைப்பார்த்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடான நம் நாட்டில் எல்லா தொகுதிகளிலும் இந்தமுறை மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முக்கிய காரணமாகும்.

தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்தை நான்தீவிரமாக ஆதரிப்பவன். கட்டாய வாக்குப்பதிவை அமல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் முயற்சியெடுத்து அந்த நடவடிக்கை வெற்றிபெறுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். வாக்களிக்க தவறுபவர்களுக்கு அபராதம் கூட விதிக்கலாம். இல்லாத பட்சத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு அடுத்ததேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று நடைமுறைப்படுத்தினாலும் நன்றாகத்தான் இருக்கும்” என்றார்.

Tags:

Leave a Reply