மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும், கூட்டணி பலம், மோடி அலை ஆகியவற்றால் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று பாஜக தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது ஏன் என தெரியவில்லை. மத்திய, மாநில ஆளும்கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம்கொடுக்க இந்த 144 தடை உத்தரவு உதவிகரமாக இருந்துள்ளது. ஆனாலும், இதையெல்லாம் மீறி கூட்டணி பலம், மோடி அலை ஆகியவற்றால் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்.

பாஜக ஆட்சி அமைப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ்கட்சி உள்ளது. அதற்காக பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெறக்கூட அவர்கள் தயங்க மாட்டார்கள்.

மோடி உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. மோடியின் பாதுகாப்பில் காங்கிரஸ் அக்கறை செலுத்தவில்லை. ஆனாலும் மோடி துணிச்சலாக உள்ளார். பாஜகவும் துணிவுடன் உள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply