சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஐஎஸ்ஐ., உளவாளிகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது இந்தியாவில் வலுவான பிரதமர் வந்துவிடக் கூடாது என்பது பாகிஸ்தானின் எண்ணமாக உள்ளது. அந்தவகையில் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் சமீபத்திய பேச்சை சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது. தமிழகத்திற்குள் நுழைந்துள்ள ஐஎஸ்ஐ., உளவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வில்லை என்பதையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையசம்பவம் காட்டுகிறது,

சமீபத்தில் கைதுசெய்யபட்ட ஐஎஸ்ஐ உளவாளிகளிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் பலஇடங்களை தகர்க்க உள்ளதாக தெரிவி்த்துள்ளனர் எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

Leave a Reply