பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமிதரிசனம் செய்தார்.

பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமியை தரிசித்தார். அவருடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன்கல்யாண் ஆகியோர் சென்றிருந்தனர்.

மோடி கோவிலில் சுமார் 20நிமிடங்கள் இருந்துள்ளார். அவர் ஏழுமலை யானை தரிசித்தபிறகு காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலுக்கும் சென்று சாமிதரிசனம் செய்துள்ளார். இதுகுறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, திருமலை கோவிலில் வெங்கடேஸ் வரரை தரிசித்தேன். நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக வேண்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply