பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், தென்சென்னை வேட்பாளருமான இல.கணேசன் வால்பாறை கவர்க்கல் காமாட்சியம்மன் கோவில், வால் பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்செய்தார்.

அதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக மக்கள் அதிமுக., திமுக.விற்கு வாக்களித்து சலிப் படைந்து விட்டார்கள். அவர்களுக்கு ஆறுதல்தரும் விதத்தில் தேர்தல்முடிவுகள் இருக்கும். பா.ஜ.க கடினமான தேர்தல்பணியால் அதிக இடங்களில் எங்களது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும்.

ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் பிரசாரம்செய்த பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடும் வெளியாட்களை வெற்றிபெற செய்யக் கூடாது என்று பேசியுள்ளார். இது போல் நாங்களும் வெளிநாட்டினரை வெற்றிபெற அனுமதிக்க கூடாது என்று பேசினால் அது நன்றாக இருக்காது. பிரியங்காபேசியது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

Leave a Reply