மத்தியில் ‘தாய் மகன்’ அரசு, நாட்டை ஊழல்மிகுந்த தேசமாக மாற்றிவிட்டது. ‘ஊழல் ஆந்திரா’வுக்கு பதில், ‘சுவர்ண ஆந்திரா’ அமைய பாஜக., தெலுங்குதேசம் கூட்டணிக்கு வாக்களியுங்கள்,” என்று , திருப்பதியில், பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியுள்ளார்.

திருப்பதியில் நடந்த பிரசாரத்தில் மோடி மேலும் பேசியதாவது: ஆந்திரமக்களின் சம்மதமின்றி, மத்திய அரசு தெலுங்கானா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தெலுங்கு பேசும் மக்களை, காங்கிரஸ் அவமதித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஜூன் 2ம் தேதி உதயமாகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நாளில் தான் இத்தாலி உருவானது. மத்தியில் ஆளும், தாய்மகன் அரசு நாட்டை ஊழல்மிகுந்த தேசமாக மாற்றிவிட்டது. சீமாந்திராவின் வளர்ச்சிக்காக, பாஜக., தெலுங்குதேசம் கூட்டணியை ஆதரியுங்கள். உங்களிடம் இருவாய்ப்புகள் உள்ளன. ஒன்று ஊழல்மிகுந்த ஆந்திரா, மற்றொன்று தங்கமான ஆந்திரா. இதில் எது தேவையோ, அதை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.

நானும் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் வளர்ச்சிக்காக இங்கே ஒன்றுபட்டுநிற்கிறோம். நாடுமுழுவதும் 100 சீரான நகரங்களை தேர்ந்தெடுக்க உள்ளோம். அதில் சீமாந்திராவுக்கு உரியபங்கு உண்டு.

மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்குவந்தால், நாட்டில் உள்ள நதிகளை இணைப்போம். அது ராயல சீமாவுக்கு பலன் தரும்” என்றார்

Leave a Reply