காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இப்போது திடீர் என்று கடவுளை குறிப்பிட்டு அடிக்கடி பேசிவருகிறார் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், காலிலாபாத் என்ற இடத்தில் நரேந்திரமோடி மேலும் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் விக்கெட் ஒவ்வொன்றாக சரிந்துவருகிறது. கடந்த 20 25 ஆண்டுகளில் சோனியாகாந்தி கடவுள் பெயரை குறிப்பிட்டு பேசியதாக நான் அறியவில்லை. இப்போது கடவுளை வேண்டுகிறார் என்றால், காங்கிரஸ் எத்தகைய பிரச்சினையை சந்தித்து வருகிறது என்பதை நீங்கள் நினைத்துப்பாருங்கள். காங்கிரஸ் தலைமையிலான இப்போதையை அரசு மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. புதிய அரசு அமைவதற்கான வலுவான அடித்தளம் இந்த தேர்தலில் அமைக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை என்ற போர்வையில் காங்கிரஸ் என்னை தாக்கிப்பேசிவருகிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த வார்த்தையை காங்கிரஸ் பயன் படுத்துகிறது. உங்களின் மகிழ்ச்சிக்காக நான் போராடுகிறேன். அவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக போராடுகின்றனர்.

நிலம், சுரங்கம், ஆகாயம், தண்ணீர் என ஒவ்வொரு துறையிலும் சுரண்டல்மூலம் பெருமளவு ஊழல் செய்து, இந்நாட்டை ஊழல் மிகுந்த நாடாக காங்கிரஸ் மாற்றிவிட்டது. உலகின் ஊழல் நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.

வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தே.ஜ.,கூட்டணி ஆட்சியில் 6 ஆண்டுகளில் 6 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் தனது 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று கூறியிருந்தது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 1.5 கோடி பேருக்குகூட வேலை வாய்ப்பு வழங்கப் படவில்லை. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் உங்கள் நலனுக்காக செய்த ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுசொல்லுங்கள். டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது தான் அவர்கள் செய்யும் ஒரேசெயல்.

உபி.யில் உள்ள தந்தைமகன் அரசு டெல்லியில் உள்ள தாய் மகன் அரசை இந்த முறை காப்பாற்ற முடியவில்லை. இதனால் தான் அடிக்கடி சோனியா கடவுளை வேண்டுகிறார். இதிலிருந்து அவர்களின் பிரச்சினை எத்தனை பெரியது என்பதை நீங்கள் உங்களால் முடியும் என்றார் .

Leave a Reply