வாஜ்பாய் ஒரு மகாத்மா, மோடி ஒருநேதாஜி எனற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்:

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; எங்களுக்கு வாஜ்பாயும், மோடியும் ஒரேமாதிரிதான். ஒருவர் மகாத்மா காந்தி போன்றவர், மற்றவர் நேதாஜிபோன்றவர். தேசிய வாதத்தால் வழிநடத்தப்படும் மத சார்பின்மையை இருவரும் நம்புகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.,தான் பா.ஜ.க.,வுக்கு ஒருகொள்கை வழிகாட்டும் அமைப்பாகும். அதன் தொண்டர்கள் தற்போது உத்தர பிரதேசத்தில் முழு வீச்சுடன் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச இடங்களை பாஜக கைப்பற்றவேண்டும் என்ற வெறியுடன் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

100 சதவீத வாக்குகளை பெறுவதற்கும், சரியான வேட்பாளரை தேர்வுசெய்யுங்கள் என்றும் மக்கள் மத்தியில் அவர்கள் பிரசாரம்செய்து வருகின்றனர். அத்வானி மோடிக்கு எதிரானவர் அல்ல. பாஜக பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வில்லை என்று அப்போது அவர் வருத்தத்தில் இருந்தார் அவ்வளவு தான். அத்வானியின் கருத்துகள் மோடிக்கு எதிரானவை அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வகுப்புவாத கட்சி என்று பேசுபவர்கள் முட்டாள்கள். அவர்கள் தங்களையும் முட்டாளாக்கிக்கொண்டு, இந்த தேசத்தின் மக்களையும் முட்டாளாக்க பார்க்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத, மனிதாபிமான கொள்கைகளை கொண்ட அமைப்பாகும் என்றார்.

Tags:

Leave a Reply