பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பிரியங்கா காந்தி தினமும் தரம்குறைந்த வார்த்தைகளால் விமர்சிக்கிறார். அவர் தனது விமர்சனங்களால், ராகுல்காந்தியை அரசியல் களத்திலிருந்து ஓரங்கட்டிவிட்டார் என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மூன்றாவது அணி என்பது வெறும்பேச்சு. அவர்களால் எந்தப்பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை கருத்தில் கொண்டு பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என கேட்கிறீர்கள். உங்களை மகிழ்விக்கும் வகையில் பதிலளிக்கிறேன். தமிழகத்தில் பாஜக கூட்டணி கணிசமான இடங்களைப் பெறும் என்றார்

Tags:

Leave a Reply