பாஜக.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பன்குரா என்ற இடத்தில் இன்று தேர்தல்பிரசாரம் செய்தார்.

தன்னை ‘காகிதப்புலி’ என்று விமர்சித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கு பதிலடி தரும்வகையில் இந்த கூட்டத்தில் பேசிய மோடி, மேற்கு வங்காள மக்களை ஏமாற்றிய சாரதா நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் ஜெயிலில் தள்ளி ஏழை முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத்தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:-

என்னை காகிதப் புலி என்று அழைத்த நீங்கள் (மம்தா) என்னைப்பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? என்று ஆச்சரியப்படுகிறேன். காகிதப்புலியே உங்களுக்கு இவ்வளவு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால், ஏழை மக்களை ஏமாற்றிய சாரதா நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் ஜெயிலில் தள்ளி, முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத்தரும் நிஜப்புலி உங்கள் எதிரே வந்தால் என்ன ஆகும்?

மத்தியில் பாஜக.ஆட்சி அமைந்தால் மம்தாவின் ஏசல்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல், மேற்குவங்காள மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு தேவையானவற்றை செய்துதருவோம். அதேவேளையில், உங்கள் மாநில முதல் மந்திரியும் அவரது வேலையை ஒழுங்காகசெய்வார்.

மத்தியில் பாஜக. தலைமையில் பலமான ஆட்சியமைந்தால் உங்களுக்கு இரட்டை ஆதாயமாக அமையும். நாங்களும் உங்களுக்கு தேவையான நல்லவற்றைசெய்வோம். உங்கள் முதல்மந்திரியும் இந்த நாடகங்களை எல்லாம் நிறுத்திக்கொண்டு ஆட்சியின் மீது அதிக அக்கறைசெலுத்த தொடங்குவார்.

நான் நூறு கிலோ மீட்டருக்கு சாலைகளை போட்டால், அவர் பத்து கிலோமீட்டர் அளவுக்காவது சாலைபோட வேண்டிவரும். நான் உங்களுக்கு ஒருலட்சம் வீடுகளை கட்டித்தந்தால், அவர் பத்தாயிரம் வீடுகளையாவது கட்டித்தர வேண்டிய நிலை ஏற்படும்.

பிறகு, உங்களின் (மேற்கு வங்காளம் மாநிலமக்கள்) இரண்டு கைகளிலும் ‘ரசகுல்லாதான். மோடியையும் வேலைசெய்ய அனுமதியுங்கள். மம்தாவையும் வேலை செய்ய அனுமதியுங்கள். ஒருபோட்டி இருக்கட்டும். இரண்டுக்கும் வித்தியாசத்தை பாருங்கள்.

காகிதப் புலியா? நிஜப் புலியா? யார் சிறப்பாக வேலை செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.

பங்களாதேசில் இருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் உடனடியாக அவர்களது தாய்நாட்டுக்கு திரும்பி செல்லவேண்டும். அதே வேளையில், மதத்தின் அடிப்படையில் பங்களாதேஷிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களை பாஜக திறந்தமனதுடன் வரவேற்க தயார். துர்காஷ்டமி பண்டிகை கொண்டாடு பவர்களும் பெங்காலிமொழி பேசுபவர்களும் இந்தியர்கள் தான்,

அவர்கள் அனைவரும் இந்தியர்களாகவே கருதப்படுவார்கள். மம்தாபனார்ஜி ஓட்டுபெறும் நோக்கத்துடன் பங்காளதேசில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தவர்களுக்கு சேவகம்செய்து வருகிறார் . அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு சேவகம் செய்வதை காட்டிலும் சுந்தர்பான் காட்டில் வசிக்கும் புலிகளுக்கு மம்தா பனார்ஜி சேவகம்செய்யலாம் என்றார்.

Leave a Reply