இந்ததேர்தலை அரசியல் படிக்கும் மாணவன் போல் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். கற்றும்வருகிறேன். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பலகாங்கிரஸ் தலைவர்கள் போட்டியிலிருந்து பின் வாங்கிவிட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிந்துவிட்டது. என்று பாஜக.,பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மேலும் கூறியதாவது: நான் 4 அல்லது 5 மாதங்களாக பலமேடைகளில் உரையாற்றியுள்ளேன். நான் கடுமையான உழைப்பாளி, சிறுவயதில் தொழிலாளியாக பணி புரிந்துள்ளேன். கட்சி எனக்கு வழங்கிய பணியை சிறப்பாக பணிபுரிந்துள்ளேன். கடவுள் எனக்குவழங்கிய வலிமையை உணர்ந்துள்ளேன்.இதுவரை நான் கலந்துகொண்ட எனது பேரணி எதுவும் ரத்து செய்யப்பட வில்லை. எந்தபேரணியும் தாமதமானதாக மீடியாக்கள் செய்தி வெளியிடவில்லை. மக்கள் எனக்கு வழங்கிய வாழ்த்துக்கள் மூலம் நான் பலமடைகிறேன்.சிறுவயது முதல் யோகா செய்து வருகிறேன். வருடத்தில் 300 நாட்கள் யோகாசெய்ய முயற்சி செய்வேன்.

வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது.10 ஆண்டுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தை ஆட்சிசெய்த திக் விஜய் சிங் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி பெறவில்லை.சத்தீஸ்கர் மாநிலமும் நக்சல்கள் பாதிக்கப்பட்ட மாநிலம். பழங்குடியினர் அதிகம்பேர் வசிக்கின்றனர். இரு மாநிலமும் பாஜக., ஆட்சியில் வளர்ந்துள்ளது.சிவராஜ்சிங் சவுகான் ஆட்சியில் மத்திய பிரதேச மாநிலம் வளர்ச்சியின் உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

தேர்தல் விதி மீறல் தொடர்பாக குஜராத் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவர். இந்தவிவகாரத்தில் சட்டம் தன்கடமையை செய்யும் பொதுவாழ்க்கையில் நீண்டநாட்களாக உள்ளேன். இதுவரை எந்தவழக்கும் என்மீது பதிவு செய்யப்பட்டதில்லை. குஜராத் போலீசார் தங்கள் பணியினை சிறப்பாகசெய்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவர். அவர்கள் என்னிடம்கூட விசாரணை அறிக்கையை காட்டமாட்டார்கள்.

இந்ததேர்தலை அரசியல் படிக்கும் மாணவன் போல் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். கற்றும்வருகிறேன். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பலகாங்கிரஸ் தலைவர்கள் போட்டியிலிருந்து பின் வாங்கிவிட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிந்துவிட்டது. இரட்டை இலக்கதத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவது சந்தேகம்.முதல் முறையாக 25 கட்சிகளுடன் பாஜக., தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமானசெய்தி. காங்கிரசுக்கு அல்ல.

வாஜ்பாய் ஆட்சியில் 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்ற எண்ணம் இருந்தது. இது எங்களின் சாதனையையும், கொள்கைகள் தெளிவாக உள்ளதையும் எடுத்துக் காட்டியது.சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவையே பாஜக.,வின் தேர்தல் மந்திரங்கள். மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். இருப்பினும் வரும் 16ம் தேதி வரை நான் எதுவும் கூறமாட்டேன். பாஜக.,வுக்க சிறந்த சாதனை உள்ளது. வரலாறு உள்ளது. காங்கிரஸ் மற்றும் பிராந்தியகட்சிகளின் ஆட்சியை மக்கள் பார்த்துள்ளனர். சில வளர்ச்சி திட்டங்கள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி ஆளும் மாநிலங்களிலும் சாத்தியமாக உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலானஆட்சயில் இந்தியாவை ஊழல் இந்தியா என பெயரெடுக்கும் படி மாற்றியுள்ளனர்.என்னுடைய கடுமையான உழைப்பு காரணமாக இதனை மாற்றி, வலிமையான இந்தியாவாகவும், சீனாவை பின்னுக்குதள்ளி நாட்டை மாற்றிக் காட்டுவேன்.இந்தியாவில் 60 வருடங்கள் வீணாகிவிட்டது. இன்னும் 5 வருடங்கள் வீணாகவேண்டுமா? நாம் எடுக்கும் முடிவுகளை கொள்கைகள் தான் வழிநடத்தி செல்லும். ஏழைகளுக்கான பணம் ஊழல்காரணமாக தொலைந்து விட்டது.

யாருடைய தலையீடு மற்றும் ஊழல் இல்லாமல் குஜராத்தில் 13 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குஜராத்தில் அனைத்து தகவல் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தை பயன் படுத்தி ஊழலை குறைத்துளளோம்.மத்திய அரசில் ஜெயந்தி வரி உண்டு என பலர் கூறியுள்ளனர். இது இல்லாம் எந்தகோப்பும் நகராது எனவும் கூறியுள்ளனர். அவர் பதவிவிலகிய பின் பல கோப்புகள் கையெழுத்தாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

கறுப்புபண விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டுள்ளது. கறுப்பு பணத்திற்கு எதிராக பாஜக.,மூத்த தலைவர் அத்வானி பலபேரணி மற்றும் யாத்திரைகளை நடத்தியுள்ளார். கறுப்புபணம் விவகாரம் பாஜக.,வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை பாஜக., திருப்பி கொண்டுவரும்.

நான் வத்ரா பற்றி எதுவம் கூறியதில்லை. ஊழலுக்கு எதிராக மட்டும் போராடிவருகிறோம்.நான் பிரதமரானால்கூட சட்டத்தை விட உயர்ந்தவனல்ல. நான் தவறுசெய்ததாக குற்றம் சாட்டப்பட்டாலோ, அல்லது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சட்டப்பட்டாலோ விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன்.நான் பிரதமரானாலும் என் மீது விசாரணை நடத்தலாம். பிரியங்கா தற்போது அரசியலில் இல்லை. இதனால் அவருக்கு நான் அவருக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அரசியல் விமர்சனங்களுக்கு எந்தகுடும்ப உறுப்பினர்களையும் கொண்டு வரக் கூடாது.நான் பிரியங்கா பற்றி எந்த கருத்தும் தெரிவித்ததில்லை.

கடந்த 12 வருடங்களாக என் மீது தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. எனக்கு எதிராக செயல்பட இன்னும் பலர் காங்கிரசுக்கு தேவைப்படுகின்றனர். காங்கிரசார் என்னை பற்றிகடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் என் குடும்பத்தினர் திருப்பிவிமர்சனம் செய்ததில்லை. அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் வைத்து என்னை விமர்சனம் செய்துள்ளனர். மக்கள் விரும்பினால் இன்னும் 5 ஆண்டுகள் காங்கிரசுக்கு வாய்ப்புதரலாம் அல்லது எனக்கு ஓட்டுப்போடலாம்.அமித்ஷா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறு.அமித்ஷா மீதான குற்றச்சாட்டிலிருந்து தேர்தல் ஆணையம் விடுவித்துள்ளது. அவர் மீதான தடையையும் அகற்றியுள்ளது.

பாஜக.,வின் கொள்கைகள் வாஜ்பாய் காலத்திலிருந்து தெளிவாக உள்ளது. இந்தியாபோன்ற பெரியநாட்டில் வசிக்கும் நாம் ஏன் பயத்துடன் வாழவேண்டும். நமது உறவு மனப் பூர்வமானதாக இருக்க வேண்டும். இந்தியாவின் கொள்கைகள் அடிப்படையில் பாகிஸ்தானுடனான உறவுகையாளப்படும். அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் சுகாதாரம் உள்ளிட்ட பலமுக்கிய துறைகளில் பணிபுரிகின்றனர். பல அமெரிக்கர்கள் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்துள்ளனர். அதிகளவிலான முதலீட்டாளர் குழுவினர் குஜராத்தில் உள்ளனர். இந்தியாவில் அன்னிய முதலீட்டின் அளவு அதிகரிக்கப்படும்.

கட்சி எனக்குவழங்கிய பணியை சிறப்பாகவும் திறமையாகவும் செய்வேன்.பாஜக.,திறமையான கட்சி. ஒழுங்கு முறைகளை பின்பற்றும் கட்சி. வாஜ்பாய் காலத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அத்வானிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு நன்றாக <உள்ளது என கூறினார்.

Leave a Reply