வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு “அகதிஅந்தஸ்து வழங்குவதை எதிர்ப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”வர்த்தகம் செய்வதற்காகவோ, இதர காரணங்களுக்காகவோ சட்ட விரோதமாக இங்கு குடியேறியவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப் படாது என்று எங்கள் தேர்தல்அறிக்கையிலேயே தெரிவித்துள்ளோம்” என்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது, “”தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவந்தால், வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்” என்று மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply