பத்திரிகையாளர் சந்திப்புமீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இல்லை” என்று  பாஜக. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள புகார்மனுவில் கூறியுள்ளார் :

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஓட்டுப்போட்டுவிட்டு வெளியில் வந்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை பத்திரிகையாளர்கள் இடைமறித்து பேசினர். இது, திட்டமிடப்பட்டோ, முன் ஏற்பாடுகளுடன் நடந்த சந்திப்பு அல்ல. தற்செயலாக நடந்த சந்திப்பு. ஆனால், சட்டத்தைமீறி பொதுக் கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை ஓட்டுப்போடும் இடத்திற்கு வரவிடாமல் தடுக்க வேண்டியது உள்ளூர் தேர்தல் அதிகாரிகளின் கடமை. குறிப்பாக முக்கியநபர்கள் வரும் போது இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பு.

பத்திரிகையாளர்கள் சந்திப்புகுறித்து தேர்தல் நன்னடத்தை விதிகளில் எந்தகட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இது குறித்து தெளிவான விதி முறைகளை வகுக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய விதி முறை பொதுக் கூட்டம் நடத்துவதை மட்டுமே தடைசெய்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பு, விளக்கம் அளித்தல், கட்சித்தொண்டர்கள் கூட்டம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை. இதற்கு கட்டுப்பாடுவிதிக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. இதில் மாற்றம் கொண்டுவரும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. பிரதமர் மன்மோகன்சிங், அமர்தியாசென் போன்றோர் கூட ஓட்டுப் போட்டுவிட்டு வரும்போது பாஜக தலைவர்களை விமர்சித்துள்ளனர். எனவே, மோடிமீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply