ஜெய் ஜவான், ஜெய்கிசான்’ (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்று லால்பகதூர் சாஸ்திரி முழங்கினார். அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை இப்போது எப்படி உள்ளது? என்று நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார் .

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம்செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் பலகட்டங்கள் முடிந்து விட்டன. பல மாநிலங்களை சேர்ந்த மக்களைச் சந்திக்கும்வாய்ப்பு கிடைத்தது. தாய்க்கும் மகனுக்கும் ( சோனியா- ராகுல்) காலம் முடிந்துவிட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த ஓட்டுப்பதிவிலேயே முடிவு தெளிவாகிவிட்டது. மிகவும் பின்தங்கியுள்ள இந்த அமேதிதொகுதியில் ஸ்மிருதி இரானியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். ஸ்மிருதி இரானியை நான் முழுமையாக நம்புகிறேன். அவர் ஒருபிரபலமானவர் மட்டுமல்ல; சாதனையாளரும்கூட. இந்த தொகுதியில் உள்ள 10 கிராமங்களின் பெயர்களையாவது ராகுலால் கூறமுடியுமா? நாட்டின் வளர்ச்சியை இந்த அமேதி தொகுதியிலிருந்து துவக்கவிரும்புகிறேன். பாஜக., அரசு அமையப்போவது உறுதி. நான் இங்கு அரசியல் நடத்தவரவில்லை; உங்கள் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ளவே வந்திருக்கிறேன். இங்கு இதுவரை அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லை.

காங்கிரசின் கிண்டல்:

பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள்கொடுங்கள் என்று நான் மக்களிடையே கேட்டால், நான் பிச்சைஎடுப்பதாக காங்கிரசார் கிண்டல் செய்கின்றனர். அவ்வாறு கேட்பதில் நான் பெருமைப்படுகிறேன்; ஏனென்றால் ஏழைகள் தான், கூடுதலாக கொடுங்கள் என்றுகேட்பார்கள். ஆனால் காஙகிரசாரோ, ஏழைகள் என்றபெயரில் மக்களைக் கொள்ளையடித்தனர். சாதாரண ஒரு டீக்கடைக் காரர், தங்களை எதிர்த்து போட்டியிடுவதை காங்கிரசார் விரும்பவில்லை. நல்லகாலம் விரைவில் வரும். எத்தனை காலம் தான் மக்களின் குரலை ஒடுக்கி ஆள முடியும்?

அமேதியிலும் ரேபரேலியிலும் காங்கிரஸ் பிரசாரத்தின் போது, டி.வி., காமிரா ஒரேமுகத்தை மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் அங்குகாட்டுவதற்கு மக்கள் கூட்டம் இல்லை.
அமேதிதொகுதியின் பரிதாப நிலைக்கு மாநில அரசைக் குறை கூற முடியாது; ஏனென்றால் அமேதி நிலைகுறித்து, மத்தியிலிருந்து மாநில அரசுக்கு ஒருகடிதம் கூட எழுதப்பட்டதில்லை. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை என்று எத்தனை காலத்துக்கு ராகுல் கூறுவார்? உங்களுக்காக ராகுல் என்ன செய்திருக்கிறார்?

காங்கிரஸ் அரசின் சட்டத்தையே “நான்சென்ஸ்” என்று கூறியவர் ராகுல். கோப அரசியல் நடத்துவதில் கை தேர்ந்தவர்கள் சோனியாவும் ராகுலும். சோனியாவின் கோபத்தால் பலகாங்கிரஸ் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். கா்ஙகிரஸ் தலைவர் பதவியிலிருந்து சீதாராம்கேசரி தூக்கி எறியப்பட்டார்; முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் இறந்தபோது அவரை டில்லியில் அடக்கம்செய்ய அனுமதிக்கவில்லை. ஊழல் குறித்தும் வறுமை குறித்தும் கேட்டால் காங்கிரஸ் தலைவர்களுக்கு விளக்கம் கூறத் தெரியாது; கோபப்படத்தான் தெரியும்.

நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுமார் நான்கைந்தாயிரம் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் அம்மா- பிள்ளை ஆட்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயர் நாட்டைவிட்டே காணாமல் போய்விட்டது.

இந்த அநீதிக்கு பதில் அளிக்கும் விதமாக சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே பெரிய நினைவிடத்தை குஜராத்தில் அமைக்க தீர்மானித் திருக்கிறேன். அமெரிக்காவுக்கு செல்கின்றவர்கள், அங்குள்ள சுதந்திரதேவி சிலையின் பிரமாண்டத்தை பார்த்து வியந்து போகின்றனர்.

அதைவிட இரண்டுமடங்கு பிரமாண்ட சிலையை குஜராத்தில் அமைத்து, ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய ஒரு நினைவிடம் சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக அமைக்கப்படும்.

‘ஜெய் ஜவான், ஜெய்கிசான்’ (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்று லால்பகதூர் சாஸ்திரி முழங்கினார். அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை இப்போது எப்படி உள்ளது?

நமது வீரர்களின் தலைகளை பாகிஸ்தானியர்கள் துண்டிக்கும்போது மத்திய அரசு எதுவுமே செய்யமுடியாத நிலையில் உள்ளது. கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிகையைவிட தற்கொலை செய்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகி, கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளது.

அம்மா-பிள்ளை ஆட்சி இதற்கெல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை. ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கம் எல்லாம் போய் ‘மர் கிசான், மர் ஜவான்’ (விவசாயி சாகட்டும், ராணுவ வீரர்கள் சாகட்டும்) என்பதே தற்போதைய முழக்கமாக இருக்கிறது.

நான் பிரதமராகி விட்ட நினைப்பில் பேசி வருவதாக சோனியா காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீங்களே(சோனியா) மோடி தன்னை பிரதமராக கருதிக் கொள்கிறார் என்று கூறும்போது, உங்கள் வாக்கு பலிக்கட்டும். உங்கள் வாயில் நெய்யுடன் கலந்த சர்க்கரையை போட வேண்டும் என்றுதான் என்னால் கூற முடியும்.

Leave a Reply